Home உலக செய்திகள் காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர்: இல்ட்டிஜா ஜாவேட்

காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர்: இல்ட்டிஜா ஜாவேட்

39
0

காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர் என மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட் வேதனை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இந்திய உள்துறை அமைச்சரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது;

எனது தாயார் கைதுசெய்யப்பட்ட பின்னர்  நான் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். இந்தியாவின் ஏனைய பகுதிகள் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில்  காஸ்மீர் மக்கள் விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு வீட்டிற்கு வெளியே செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எவரையும் நான் சந்திப்பதற்கு அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சரிற்கான கடிதத்தில் தான் ஏன் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் முதலமைச்சரின் மகள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தமைக்காகவே தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்  கற்பனை செய்யமுடியாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமையில்லை என தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்வதற்கு கசப்பான உண்மையை தெரிவித்தமைக்காக நான் யுத்த குற்றவாளியை போல நடத்தப்படுகின்றேன் எனவும் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட ஜாவேட் தெரிவித்துள்ளார்.