Home செய்திகள் வவுனியாவில் குழு மோதல் – இருவர் காயம், எழுவர் கைது:

வவுனியாவில் குழு மோதல் – இருவர் காயம், எழுவர் கைது:

33
0

வவுனியா – குருமன்காட்டில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.