Home செய்திகள் வடமராட்சிக் கடலில் மீனவர் படகு மீது மோதிய கடற்படை படகு:

வடமராட்சிக் கடலில் மீனவர் படகு மீது மோதிய கடற்படை படகு:

5
0

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடலில் தொழிலுக்கு சென்று கரை திரும்பிக்கொண்டிருந்த மீனவர் படகை வழிமறித்து, மீனைப் பெற்றுக் கொண்ட சிறீலங்கா கடற்படையினர் படகு மீது, தமது படகை மோதி சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

வத்திராயன் பகுதியிலிருந்து தொழிக்குச் சென்று கரை திரும்பிக் கொண்டிருந்த படகை வழி மறித்தே கடற்படையினர் இன்று இத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் சேதத்திற்குள்ளான படகு கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்தமையை அவதானித்த சக மீனவர்களின் உதவியுடன் படகும், தொழிலாளியும் கரை வந்து சேர்ந்துள்ளனர்.