Home முக்கிய செய்திகள் முதல் மாநாட்டிலேயே தமிழர் விரோதத்தை வெளிப்படுத்திய மஹிந்த அணி!

முதல் மாநாட்டிலேயே தமிழர் விரோதத்தை வெளிப்படுத்திய மஹிந்த அணி!

39
0

சிங்கள கடும்போக்கு வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த தலைமையிலான “பொதுஜன பெரமுன” கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேபாளராக அறிவித்துள்ள நிலையில் நேற்றைய மாநாட்டு மேடையில் ஒரு தமிழ் எழுத்தையோ, ஆங்கில எழுத்தையோ காண முடியவில்லை.

மஹிந்த அணியின் இச் செயற்பாடு கடும்போக்குடைய சிங்கள வாக்குகளை மட்டுமே இலக்காகக் கொண்டது என்பதையும், தனிச் சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியையே நிலை நாட்டுவோம் என்பதையும், நாடு பூராகவும், சிங்கள மயமாகும் என்பதையும் பறைசாற்றி நிற்பதாக அமைந்துள்ளது.

ராஜபக்ஷக்கள் மீதுள்ள கோபமும், அச்சமும் ஒரு துளீ கூட நீங்காத நிலையில் சில சுயநலவாதிகளை தவிர ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்த்து வரும் நிலையில் தமிழ்த் தலைமைகள் இவற்றை கருத்தில் கொண்டு சரியான முடிவுகளை எடுத்து தமிழர் பக்கம் நிற்கவேண்டும் என்பதும், தமிழர்களுக்கான உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஏக்கமாக உள்ளது.