Home செய்திகள் தமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம்: பொன்சேகா

தமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம்: பொன்சேகா

15
0

தமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம் என அவர்களின் ஆட்சியின் போது இராணூவத் தளபதியாக பணியாற்றி தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு போரை நடாத்திமுடித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியால் கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேபாளர் என அறிவிக்கப்பட்ட பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறூகையில் “ராஜபக்சவின் முழுக் குடும்பத்தையும் தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி அவரைத் தோற்கடித்தார்கள். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராகக் களமிறங்கினால் அவருக்கும் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயங்க மாட்டார்கள்.

போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்? இவருக்கு வெட்கமில்லையா? எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.