Home தாயக செய்திகள் “எழுக தமிழ்” பேரணி அவசரமானதும், அவசியமானதுமாகும் – பல்வேறு மட்டத்திலிருந்தும் ஆதரவு:

“எழுக தமிழ்” பேரணி அவசரமானதும், அவசியமானதுமாகும் – பல்வேறு மட்டத்திலிருந்தும் ஆதரவு:

20
0

நாம் இங்கு கட்சியை வளர்க்க முற்படவில்லை, மக்களை ஒன்று சேர்த்து இன்னல் படும் மக்களின் விடிவிற்காக அரசியல் ரீதியில் போராடவே நினைத்துள்ளோம். 

ஆனால், சிலர் எம்மால் நடாத்தப்படவுள்ள “எழுக தமிழ்” பேரணியில் சேரவிருப்போரை தடுக்க கங்கணம் கட்டியுள்ளத்ஆக அறிகிறேன்.  சுயநல காரணங்களுக்காக தமது கட்சி நலன் சார்ந்து இவ்வாறான தீர்மானங்களை யார் எடுத்தாலும் அது எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும். என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடமாகாணசபை முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு பேரணியையும், மக்கள் எழுச்சியையும் குழப்பவும், தடுக்கவும் முயல்வோரிடம் மிக அவதானமாக இருக்குமாறும், எமக்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் தரவேண்டாம் என அவ்வாறான குழப்பவாதிகளிடம் சொல்லி வைக்குமாறும்  மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று வனுவியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் காரியாலயத்தை திறந்து வைத்த பின் அங்கு உரையாற்றுகையிலேஏ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்துவத்உ தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ல அறிவிப்பு பல்வேறு மட்டங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் இத்தகைய ஒரு நிகழ்வை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானதும், அவசரமானதுமாகும். 

இப் பேரணி தொடர்பில் தமது மகிழ்ச்சியையும், ஆதரவையும் பல்களைக்கழகம் முதல் கொண்டு தொழிளாளர் அமைப்புக்கள் என பல தரப்பினர் எம்மிடம் நேரடியாக தெரிவித்துள்ள்அனர். 

அதுமட்டுமன்றி புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

ஆகவே இன்னும் நான்கு வாரங்களே பேரணிக்கு இருப்பதால் நாம் இன்றே குழுக்களை அமைத்து பொறுப்புக்களை பகிர்ந்து துரித கதியில் “எழுக தமிழ்” நிகவை சிறப்பாக நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேஏண்டியுள்ளது என்றார்.