Home தாயக செய்திகள் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட்ட மூவர் மீது முரசுமோட்டையில் தாக்குதல்!

நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட்ட மூவர் மீது முரசுமோட்டையில் தாக்குதல்!

7
0

கிளிநொச்சி முரசு மோட்டை மருதங்குளம் பகுதியில் வயல் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பினரின் தாக்குதலில் கடுமையாக தாக்கப்பட்ட காணி உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள காணி உரிமையாளரான பெண் ஒருவர் அதனை  நேற்று அறுவடைசெய்து கொண்டிருந்த வேளையிலேயே திடீரென காணிக்குள் அத்துமீறி உட்புகுந்த முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர் அப்பெண் மீதும் அங்கு அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.