Home ஆன்மீகம் நாளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் தேர் – தொண்டர்களுக்கு அழைப்பு:

நாளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் தேர் – தொண்டர்களுக்கு அழைப்பு:

54
0

பிரித்தானியாவின் கிழக்கு இலண்டன் பகுதியில் அமைந்துள்ள ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர் உற்சவம் நாளை நடைபெறவுள்ளதால் அதிகளவான தொண்டர்கள் தேவை என ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் வருடாந்தம் அதிகளவான பக்கதர்களின் வருகைக்கு உட்பட்ட ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் நாளைய தினம் நடைபெறவுள்ள தேர் திருவிழா (இரதோற்சவம்) விற்கு சுமார் இருபதாயிரம் (20,000) பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப் படுவதால் குறைந்த பட்சம் 400 தொண்டர்கள் தேவைப்படுவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த தொண்டர்களுக்கான ஒன்றுகூடல் இன்று ஆலயத்தில் நடைபெற்ற போது ஆலய நிர்வாகத் தலைவர் திரு.கருணைலிங்கம் அவர்கள் இவ் அறிவித்தலை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு பொறுப்பாளரான சாய் தெரிவிக்கையில், தொண்டர்கள் குறைவாகவும், வேலைப்பளு அதிகமாகவும் இருப்பதால் தொண்டர்களாக பணியாற்ற பெயர்களை தந்தவர்கள் காலை 6:30 மணிக்கு பிந்தாமல் ஆலயத்தில் நிற்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதேவேளை தொண்டர்களாக பணியாற்ற விரும்பும் நண்பர்கள், நண்பிகள், உறவினர்களை அழைத்துவருமாறும் கேட்டுக்கொண்ட அவர், நாளைய ஒரு நாளை இறைவனுக்கு ஆற்றும் தொண்டாக கருதி உங்களால் முடிந்த சிறந்த சேவையை வழங்குமாறும் கேடுக்கொண்டார்.

நாளைய தினம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் தொண்டர்களாக பணியாற்ற வருவோர்களுக்கான வயது எல்லை ஆகக்குறைந்தது 15 க்கு மேல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.