Home தாயக செய்திகள் ஆழிக்குமரன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறப்பு!

ஆழிக்குமரன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறப்பு!

87
0

ஒன்பது உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழர்களுக்கும், இலங்கைக்கும் பெருமை சேர்த்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த “ஆழிக்குமரன்” ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இவ் நீச்சல் தடாகம் 25 மில்லியன் செலவில் சர்வதேச தர நீச்சல் போட்டிகளை நடாத்தக் கூடிய விதமாக “சரவ்தேச தரத்தில் 8 வளித்தடங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்த நிலையில் இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (09/008) வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

25-05-1943 அன்று யாழ் – வல்வெட்டித்துறையில் பிறந்த விவேகானந்தன் செல்வக்குமார் (ஆனந்தன்) சிறு வயதில் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும் தளராத மன உறுதியோடு நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கல்வியிலும் சிறந்து விளங்கிய இவர் ஒரு சட்டவாளரும் என்பது பலருக்கும் தெரியாத விடையம்.

மிகச் சிறந்த நீச்சல் வீரரான ஆழிக் குமரன் ஆனந்தன் பாக்கு நீரிணையை ஓரே தடவையில் நீந்திக் கடந்து உலகசாதனையை நிலை நாட்டி “கின்னஸ்”புத்கத்தில் இடம் பிடித்தார்.

1975-ல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி,அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தி சாதனை படைத்தார். அப்போது,ஈழத்தின் வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ்.டி.விநாயகம் அவருக்கு “ஆழிக்குமரன்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

ஓர் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும், அவர் மனம் தளரவில்லை. அதன் பின்னர் இவர் ஆங்கில கால்வாயை நீந்தி கடக்க திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

குறுகிய பயிற்சியோடு ஆங்கில கால்வாயை நீந்தி கடக்க முற்பட்டார். 1984-08-06 அன்று ஆங்கில கால்வாயில் நீந்திக்கொண்டிருந்த போது குளிரால் பாதிக்கப்பட்ட ஆழிக்குமரன் ஆனந்தன் சாதனை முயற்சியின் போதே மரணத்தை தழுவிக் கொண்டார்.

“குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை நான் தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை” இதுதான் அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தைகள் ஆகும்.

ஆழக்குமரனின் உலக சாதனைகள்:

1*பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது.(1971-ம் ஆண்டு)

2*128 மணி நேரம் தொடர்ச்சியாக “டிவிஸ்ட்”நடனம் ஆடியது(1978)

3*1487 மைல் தூரத்தை 187 மணி நேத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது(1979)

4*33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது.(1979)

5*136 மணி நேரம் பால் பனசிங் செய்தது.(1979)

6*இரண்டு நிமிடத்தில் 165 தடவை site up செய்தது.

7*9100 தடவை high kicks செய்தது(1980)

8*நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது.(1981)

9*80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது….