Home தாயக செய்திகள் பெற்றோரை இழந்த பிள்ளைகள், மற்றும் விசேட தேவையுடையோருக்கான வட ஆளுநரின் செயற்திட்டம்:

பெற்றோரை இழந்த பிள்ளைகள், மற்றும் விசேட தேவையுடையோருக்கான வட ஆளுநரின் செயற்திட்டம்:

45
0

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமைப் பரிசில் திட்டமொன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

அதேபோல் விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து ஒன்றை யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசனங்கள் இல்லாமல், சக்கர நாற்காலியுடன் ஒருவர் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்கக் கூடிய வகையில் பேருந்து அமைந்திருக்கும்.

இந்த பேருந்து சேவையும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்.