Home செய்திகள் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை திறந்து வைப்பு:

பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை திறந்து வைப்பு:

14
0

வீடமைப்பு மற்றும் கலாச்சார  அமைச்சின் 4மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலையை இன்று (09/08) காலை அமைச்சர் சஜித் பிரேமதாஸா திறந்து வைத்தார்.

வவுனியா தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா,  பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உயர் அதிகாரிகள், கலாச்சார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் அறநெறி ஆசிரியர், ஊர்மக்களென பலரும் கலந்து கொண்டனர்.