Home செய்திகள் ரணிலுடன் கை கோர்த்த சம்பந்தனால் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லை: கோத்தபாய கிண்டல்

ரணிலுடன் கை கோர்த்த சம்பந்தனால் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லை: கோத்தபாய கிண்டல்

13
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லை என கோட்டபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஆனால், 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.