Home செய்திகள் சாவகச்சேரியில் இரு கடைகள் தீயிற்கு இரையானது:

சாவகச்சேரியில் இரு கடைகள் தீயிற்கு இரையானது:

11
0

சாவகச்சேரி – ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. 

குறித்த தீ விபத்தில் வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஆகியனவே தீப்பற்றி எரிந்துள்ளது.

இவ்விபத்தையடுத்து யாழ்மாநகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதும் பழக்கடை முற்றாக எரிந்துள்ளதுடன், வெல்டிங் கராஜ் உம் 80 வீதமான சேதத்தை அடைந்துள்ளது.