Home தமிழகச் செய்திகள் கலைஞர் கருணாநிதியின் ஓராண்டு நினைவை முன்னிட்டு சிலை திறந்து வைப்பு:

கலைஞர் கருணாநிதியின் ஓராண்டு நினைவை முன்னிட்டு சிலை திறந்து வைப்பு:

61
0

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி திறந்துவைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைந்து ஒராண்டு தினத்தை முன்னிட்டு நேற்று (07/08) புதன் கிழமை அவரது சிலை திறப்பு விழா நடைபெற்றது.

கருணாநிதியின் சிலை 6.3 அடி அகலம், 6.5 அடி உயரத்தில் மொத்தம் 30 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட சிலையின் பீடத்தில்  கருணாநிதியின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள், கி. வீரமணி, நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.