Home செய்திகள் காலம் சரியில்லையாம் – கர்நாடக ஆலயங்களில் வழிபாடுகளை செய்த ரணில்!

காலம் சரியில்லையாம் – கர்நாடக ஆலயங்களில் வழிபாடுகளை செய்த ரணில்!

42
0

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டதோடு யாகங்களையும் நடாத்தி விட்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் வழிபாடுகளை மேற்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் இங்கு சிறப்பு யாகம் ஒன்றையும் நடாத்தியுள்ளார்.

அதந் பின்னர் நேற்றைய தினம் சிறிலங்கா பிரதமரும் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவும், காசர்கோட்டில் கும்லாவுக்கு அருகே உள்ள பெலா குமாரமங்கலம் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆலயத்துக்கு ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக நேற்று வந்ததாகவும், சோதிடர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இங்கு வந்து வழிபாடுகளை மேற்கொண்டார் எனவும் என குறிப்பிட்ட குமாரமங்கலம் ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.