Home சினிமா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி:

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி:

44
0

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குனரும், நடிகை றோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி இன்று (21/07) தெரிவாகியுள்ளார்.

கடந்த மாதம் சென்னையில் நடந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் இயக்குனர் சிகரம் பாரதிராஜாவை புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர்.

இந் நிலையில், தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்தமைக்கு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. அதையடுத்து இயக்குனர் சங்க தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அவர்கள் திடீரென அறிவித்தார். 

இதனை அடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி ஆர்.கே.செல்வமணி இயக்குனர் சங்கத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.