Home விளையாட்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!

உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!

44
0

பிரித்தானியாவில் இடம்பெற்று வந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது இங்கிலாந்து அணி.

பிரித்தானியத் தலைநகர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் நேற்றையதினம் (14/07) மோதின.

முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் பல விக்கெட்டுக்களை இழந்த போதும் தளராமல் விளையாடி 241 ஓட்டங்களை எடுத்த நிலையில் இரு அணிகளும் சமமாக வெற்றியை தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தன.

பின்னர் சூப்பர் ஓவர் முறை மூலம் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அதிலும் இரு அணிகளும் 6 பந்துகளில் தலா 1 ஓட்டங்களை பெற்று மீண்டும் சம் பலத்துடன் நின்றன.

இதனால், பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியை தீர்மாணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்கமைய 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.