Home செய்திகள் யாழ் பழைய பூங்காவில் “ஸ்மார்ட் ஸ்ரீலங்கா” மண்டம்!

யாழ் பழைய பூங்காவில் “ஸ்மார்ட் ஸ்ரீலங்கா” மண்டம்!

14
0

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில், புதிதாக அமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் ஸ்ரீலங்கா அலுவலகத்துக்கான அடிக்கல்லை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நட்டார்.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், முகமாக தற்போதைய அரசாங்கத்தின் திட்டமிடலின் கீழ் இவ் “ஸ்மார்ட் ஸ்ரீலங்கா” மண்டம் யாழில் அமைக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள பழம் பெரும் பூங்காவாகவும், பல நூற்றாண்டு பழமையான மரங்களை கொண்ட இடமாகவும் உள்ள “யாழ் பழைய பூங்கா” வை பாதுகாத்து கொழும்பில் உள்ள விகாரமாகாதேவி பூங்கா போள் பராமரித்து சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும், தொன்மையான இடமாகவும் பாதுகாக்கப் படவேண்டும் என தமிழர் தரப்பால் கூறப்பட்டு வந்த போதும் அதனை செவி மடுக்காத அரசாங்கம் தமிழர்களுக்கான புதிய திட்டங்கள் எனும் போர்வையில் அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் வரும் தமிழர் தாயக நிலங்களில் ஒன்றாக தற்போது யாழ் பழைய பூங்காவும் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.