Home செய்திகள் யானையின் பலம் மூவரில் யாருக்கு..?

யானையின் பலம் மூவரில் யாருக்கு..?

44
0

யானைச் சின்னத்தை கொண்ட இலங்கையின் பழம் பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும்பான்மையை தீர்மானிக்கும் பலப்பரீட்சை ஆரம்பித்துள்ளது.

அடுத்து வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களம் இறக்குவது என்ற இழுபறிகளுக்கு மத்தியிலேயே கட்சி உறூப்பினர்களிடம் இப் பொறூப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் பெரும்பான்மை விருப்பத்திற்கமைய தெரிவு செய்வதற்கு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பாக கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அங்கு வாக்கெடுப்பை நடத்தி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.