Home செய்திகள் கிளிநொச்சி நகரின் சுற்றாடல் சிரமதானத்தில் சாரணர்கள்!

கிளிநொச்சி நகரின் சுற்றாடல் சிரமதானத்தில் சாரணர்கள்!

17
0

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளில் இன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலய சாரண மாணவர்கள் ஈடுபட்டனர்.

“நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை வளாகம் மற்றும் கிளிநாச்சி நகரின் ஏ9 வீதியின் டிப்போ சந்தி முதல் கரடிபோக்கு சந்தி வரை இரு மருங்கிலும் உள்ள உக்காத பொருள்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் சாரணர்களால் அகற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.