Home முக்கிய செய்திகள் இலங்கை சிங்களவர்களின் நாடு – காவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைப்போம்: ஞானசார தேரர்

இலங்கை சிங்களவர்களின் நாடு – காவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைப்போம்: ஞானசார தேரர்

118
0

இலங்கை என்பது சிங்களவர்களின் நாடே, நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. என தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தனி சிங்கள அரசாங்கத்தை அமைத்து நாட்டுக்கும் இனத்திற்கும் பொறுப்பு கூறும் பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் பொதுபல சேனாவினால் நடத்தப்பட்ட மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று எமது வீட்டுக்குள் விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டுக்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். தமிழ் மக்களையும் நாங்கள் அழைக்கின்றோம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கே. இதனை தமிழ் புத்திஜீவியொருவர் எனக்கு சொல்லித்தந்தார்.

நாங்கள் இந்த நாட்டில் வரலாற்றை கட்டியெழுப்பிய இனமே. நாங்கள் கள்ளத் தோனிகள் கிடையாது. எங்களுக்கு காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன.7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும். நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன்தான் வந்துள்ளோம். எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்குக் கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால், ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும். இன்று சிங்களவர்களை சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும்” – என்றார்.

இதேவேளை இலங்கை உலமா சபை உலகை அச்சுறுத்தும் நான்கும் அடிப்படை வாத அமைப்புகளுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். என்றார்.

இந்த மாநாட்டில் விசேட பிரகடமொன்றும் வாசிக்கப்பட்டது. அதன்போது 1815ஆம் ஆண்டில் கண்டி ஒப்பந்தந்தின் மூலம் சிங்களவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் வென்றெடுத்து மீண்டுடம் சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும். என குறிப்பிடப்பட்டது.