Home தமிழகச் செய்திகள் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் “வைகோ” விற்கு ஒரு வருட சிறை!

தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் “வைகோ” விற்கு ஒரு வருட சிறை!

26
0

இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் வைகோ ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஒரு வருட சிறை தண்டனை விதித்து இன்று (05/07) நீதிமன்றம் தீர்பு வழங்கியுள்ளது.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டிருந்த நிலையில், நீண்ட வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வைகோ முறையிட்டார்.

ஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்ட நிலையில் இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த நீதிபதி வைகோ விற்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பு வழன்கினார்.

இதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார். இதையடுத்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.