Home செய்திகள் வவுனியாவின் மூன்று பிரதேசங்களில் நிலநடுக்கம்!

வவுனியாவின் மூன்று பிரதேசங்களில் நிலநடுக்கம்!

15
0

வவுனியாவின் சில பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை காலை 9.52 மணியளவில் தாண்டிக்குளம், பத்தினியார், மகிழங்குளம் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டமையினால் குறித்த பகுதிகளில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும், எனினும் இதன் காரணமாக வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.