Home செய்திகள் உயிர்களை பறிக்கும் தொடரூந்து – பாதுகாப்பு கடவை அமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

உயிர்களை பறிக்கும் தொடரூந்து – பாதுகாப்பு கடவை அமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

21
0

நாள் தோறும் உயிர்களை பறிக்கும் தொடரூந்திலிருந்து மக்களை காப்பாற்ற பாதுகாப்பான கடவை அமைக்குமாறு கோரி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவைக்கு முன்பாகவே இன்று (3/7) காலை பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தொடரூந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர்.