Home செய்திகள் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்!

29
0

மூத்த ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் சுகனீனம் காரணமாக தனது 75 ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.

வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் பல வருட காலங்களாக பணியாற்றினார்.

பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய இவர் பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து பணியாற்றியதோடு இலங்கை பத்திரிகை பேரவையின் தனிக்கை பிரிவிலும் கடமையாற்றியவராவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (27/06) பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.