Home செய்திகள் இலங்கைத் தமிழரையும் ஈர்த்தது “பிக்காஸ் 3” – என்ன ஆகுமோ ஈழத் திருநாடு..?

இலங்கைத் தமிழரையும் ஈர்த்தது “பிக்காஸ் 3” – என்ன ஆகுமோ ஈழத் திருநாடு..?

29
0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இன்று(23/06/2019) ஞாயிறு ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த நிகழ்ச்சியில் இரண்டு இலங்கையர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த இளம் தொகுப்பாளினி மற்றும் செய்திவாசிப்பாளரான Losliya வும், இன்னுமோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞ்ஞரும் என தெரியவந்துள்ளது.

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் பின்னர் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு சீசன் 1, சீசன் 2 ஆகியன அதிக ரசிகர்களின் ஆதர்வுடன் வெற்றி பெற்றத அடுத்து இன்று சீசன் 3 ஆரம்பிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை நாட்டுப்பிரச்சனை, அரசியல் போன்றவற்றில் ஈடுபடவிடாமல் அவர்களின் உணர்வுகளை திசைதிருப்பி இவ்வாறான பொழுதுபோக்கு அம்ஷங்களில் ஈடுபட வைக்கும் தந்திரோபாய நடவடிக்கை கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

இன்றைய சூழலில் சூப்பர் சிங்கர் பற்றியோ, பிக்பாஸ் பற்றியோ, சின்னத்திரை பற்றியோ அதிகமாக அறிந்த மக்களே உள்ளதை அன்றாடம் சமுக்கவலத் தளங்களூடாக அறியமுடிகிறது.

இதன் திரைமறைவில், தமிழர் தாயகமும், தமிழரின் மொழியும், தமிழரின் கலாச்சாரமும் சிதைக்கப்படுவத்ஐயும், முற்றாக அழிக்கப்பட்டு வருவதையும் உணருவார்களா எம் சமூகம்…?