Home முக்கிய செய்திகள் கூட்டமைப்பின் நால்வருக்கு மோடி அழைப்பு – யார் அந்த நால்வர் ? ஆரம்பமான மோதல்!

கூட்டமைப்பின் நால்வருக்கு மோடி அழைப்பு – யார் அந்த நால்வர் ? ஆரம்பமான மோதல்!

77
0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு அழைத்திருப்பதாக தெரியவருகிறது.

அண்மையில் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவரை சந்தித்தபோது அவர்களை இந்தியாவுக்கு வந்து விரிவான பேச்சுக்களில் ஈடுபடுமாறு மோடி கேட்டிருந்ததற்கு அமைவாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நால்வருக்கு மட்டும் அழைப்பு வந்ததால் குழப்ப நிலையில் கூட்டமைப்பினர் உள்ளதாக தெரியவருகிறது.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு என்பதன் அடிப்படையில் அதன் பங்காளிக் கட்சிகளான TELO வைப் பிரதிநிதித்துவப்படுத்தி செல்வம் அடைக்கலநாதனும், PLOT ஐ பிரதிநிதித்துவப்படுத்தி சித்தார்த்தனும், கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தனும் முக்கியம் பெறுகின்றனர்.

இவ்வாறு இருக்க அடுத்த நான்காம் நபர் மாவையா, சுமந்திரனா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவைப் பொறுத்தவரையில் தந்தை செல்வா காலம் முதல் தமிழரசுக்கட்சியில் பயனிப்பவர். அத்தோடு கூட்டமைப்பின் ஓர் அங்கமான தமிழர்சுக் கட்சியின் தலைவரும் அவரே. அதனடிப்படையில் அவரை இணைத்தால் சுமந்திரனையே இம்முறை அணியில் இருந்து நீகவேண்டிய நிலை உண்டு. ஆனால் இரா.சம்பந்தனுக்கும், சுமந்திரன் தேவை. அத்தோடு இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாமல் விட்டுக்கொடுக்க சுமந்திரனும் தயாரானவரில்லை.

இதனால் குழப்பத்தில் கூட்டமைப்பு இருக்கும் நிலையில் சாதுர்த்தியமாக சித்தார்த்தனை இம்முறை பயனத்தில் விலக்கிவைக்கும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.