Home முக்கிய செய்திகள் அநுராதபுரத்தில் இருந்து செம்மலை வந்த 200 சிங்களவர் – அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையில் பொசன் வழிபாடு!

அநுராதபுரத்தில் இருந்து செம்மலை வந்த 200 சிங்களவர் – அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையில் பொசன் வழிபாடு!

28
0

முல்லைத்தீவு – நீராவியடி, பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பஸ்களிலிருந்து சிங்கள மக்களளை  அழைத்துவந்த பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் அங்கு இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் பிள்ளையார் ஆலய இருந்ததாக  தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது .

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கபட்டுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்களையும், பிளையான வரலாற்றுத் திணிப்புகளையும் பௌத்த பிக்குகளால் போதிக்கப்பட்டு வருவது கவனிக்கப்படவேண்டியது.