Home விளையாட்டு லண்டனில் ஆரம்பமானது 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி!

லண்டனில் ஆரம்பமானது 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி!

81
0

கிரிக்கெட் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பிரித்தானியாவில் இன்று (30/05) ஆரம்பமானது.

10 அணிகள் போட்டியிடும் 12வது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் மோதுகின்றன.

நாளை மறுதினம் கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ள தொடரில் நியூசிலாந்தை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.