Home முக்கிய செய்திகள் திருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு!

திருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு!

60
0

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக அவ் ஆலயம் உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயமும், கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.