Home முக்கிய செய்திகள் மிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

50
0

மிருசுவிலில் பொதுமக்கள் 8 பேரை கொலை செய்த வழக்கில் பிரதான குற்றவாளியின் மனுவை விசாரித்த உச்சனீதிமன்றம் குற்றவாளீக்கு மரணதண்டனையை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி வீடுகளை பார்க்கச் சென்றவர்களில் 8 பேரை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்து மலசல கூடக் குழிக்குள் போட்டு மூடியிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் தெய்வாதீனமாக அதிலிருந்து தப்பிய மகேஸ்வரன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்திற்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளிலேயே குறித்த குழிக்குள் இருந்து உடல் எச்சங்கள் மீட்க்ப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதோடு, அச் சம்பவத்தோடு தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

எட்டுப் பேரின் கொலைக்கு முக்கிய நபரான ஸ்ராவ் சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ அதிக்காரிக்கு கொழும்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்பு வழங்கியிருந்த நிலையில் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றில் கொலைக் குற்றவாளியான ஸ்ராவ் சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்கவினால் உச்ச நீதிமன்றில் 2015 இல் வழக்கு தொடரப்பட்டது.

அவ் வழக்கின் இறுதி விவாதம் முன்னாள் நீதியரசர் நளின் பெர்னாண்டோ, நீதியரசர்களான புவனேக அலுவிகார, சிசிர டீ ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று உச்ச நீதிமன்றில் நடைபெற்றது.

குறித்த வழக்கில் சாட்சியங்களும், தடையங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாது நிரூபிக்கப்பட்டிருப்பதால் குற்றவாளியான ஸ்ராவ் சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்க விற்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே எனவும், அதனையே உச்ச நீதிமன்றும் வழங்குவதாக கூறி தமது தீர்ப்பை வழங்கினர்.