Home தாயக செய்திகள் பருத்தித்துறையில் 11 பேர் கைது!

பருத்தித்துறையில் 11 பேர் கைது!

12
0

பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவச் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே 4 தமிழ் வர்த்தகர்களும் 7 முஸ்லிம் வர்த்தகர்களும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரிலும் இவ்வாறான தேடுதல்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான ஆடைகள் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.