Home உலக செய்திகள் 4ம் நாளாக பிரித்தானியாவில் உண்ணா நிலை, கவனயீர்ப்பு போராட்டம்!

4ம் நாளாக பிரித்தானியாவில் உண்ணா நிலை, கவனயீர்ப்பு போராட்டம்!

50
0

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட அடையாள உண்ன்அ நிலைப் போராட்டமும், கவனயீர்ர்பு போராட்டமும் நான்காம் நாளாக இன்றும் தொடர்கிறது.

இலங்கையில் அழிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் தமிழினத்திற்கு நீதி கோரியும், தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களை மீது போற்க்குற்றத்தின் கீழ் தண்டிக்க வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இப் போராட்ட்டத்தின் போது தமிழினம் சந்தித்த வலிகள், அழிவுகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும், தமிழினம் நீதிவேண்டி நிற்பதற்கான காரணங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வேற்றினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.