Home தாயக செய்திகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி!

45
0

இலங்கையில் தமிழினம் சந்தித்த பேரழிவின் அடையாளமாக விளங்கும் “முள்ளிவாய்க்கால் இன அழிப்பு” நினைவு வாரத்தின் மூனாம் நாளான இன்று (14/05) செம்மணியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணூவத்தின் கோர வெறிக்கு பலியான வேம்படி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ் . மாநகர சபை பிரதி முதல்வர் ஈசன் ஆகியோர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இது போன்று வடக்கு கிழக்கில் தொகை தொகையாக தமிழனப் படுகொலைகள் நடைபெற்ற மண்டைதீவு, நவாலி, நாகர்கோவில், வல்வெட்டித்துறை, கொக்கட்டிச்சோலை, கிளாலி, உடும்பன்மலை, போன்ற ஏனைய இடங்களிலும் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகள் இவ் முள்ளிவாய்க்கால் வாரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை தமிழர் வரலாற்றின் துயர் தோய்ந்த கறுப்பு நாட்களாக பதியப்பட்டுவிட்டது.

புள்ளிவிபரங்களின் படி 146, 679 இக் காலப்பகுதியில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் சுமார் 200,000 (இரண்டு இலட்சம்) க்கும் அதிகமான்ன்ன்ன்ன்ன்ன தமிழர்கள் அழிக்கப்பட்ட மிகப்பெரும் இன அழிப்பாக 2009 இல நடைபெற்ற இறுதிப் போர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.