Home முக்கிய செய்திகள் குருநாகல் கலவரத்தில் மூவர் பலி, பலர் படுகாயம். பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம்!

குருநாகல் கலவரத்தில் மூவர் பலி, பலர் படுகாயம். பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம்!

46
0

கடந்த 48 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இதுவரை மூவர் பலியாகியுள்ளதோடு பலர் படுகாயமடைதுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் இன்னும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கள, பெளத்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுமார் 1000 வன்முறையாளர்களால் முஸ்லீம் மக்களையும், அவர்களின் உடைமைகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல்களில் முஸ்லீம் மக்களின் கடைகள், வீடுகள், வாகனங்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டும் சில இடங்களில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டும் உள்ளன. அத்தோடு முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதனாலேயே தாக்குதல்களூக்கு இலக்காகி பலர் காயமடைந்துள்ளதோடு, மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துமுள்ளனர்.

குறித்த தாக்குதல்களை ஹெல உறுமய, மற்றும் மஹிந்த அணியைச் சார்ந்தவர்களாலேயே நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை இதுவரை காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

அத்தோடு ஊறடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இராணுவமும், காலவ்துறையினரும் கடைமையில் இருந்த போதும் கலவரம் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, பெரும் அரசியல் வாதிகளின் பின்புலமும், வழி நடத்தலும் இன்றி இவ்வாறான தாக்குதல்களுக்கு இடம் இல்ல எனவும், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கஇகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையி, நாட்டின் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்து சில மணி நேரங்களில் இக் கலவரம் இடம்பெற்றுள்ளமை மேலும் பாதுகாப்பு உயர் மட்டத்திலும், சந்தேகிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.