Home முக்கிய செய்திகள் இலங்கையில் வெளிநாட்டுப் படைகள் – அம்பலப்படுத்தினார் ரணில்!

இலங்கையில் வெளிநாட்டுப் படைகள் – அம்பலப்படுத்தினார் ரணில்!

50
0

இலங்கையில் சில் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் படைகள் தங்கியுள்ளமையை அம்பலப்படுத்தியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அல்பிட்டிய வில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு கூறுகையில்,

ஒரு தொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறீலங்காவில் தங்கியுள்ளனர். ஏனெனில் அவர்களின் நாட்டுப் பிரஜைகள் குண்டுத்தாக்குதல்களில் இங்கு கொல்லப்பட்டு உள்ளனர். ஆகவே அவர்களின் ஒத்துழைப்போடு நாட்டின் பாதுகாப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம்.

இலங்கை சுற்றுலாத்துறை மீள வழமைக்குத் திரும்ப வேண்டும். முன்னர் போல் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரவேண்டும் அதுவே எமது இலக்கு என்றார்.