Home செய்திகள் யாழ் பல்கலைக்கழக சுற்றாடலில் சுவரொட்டிகள்!

யாழ் பல்கலைக்கழக சுற்றாடலில் சுவரொட்டிகள்!

23
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் பல்கலைகழகத்தை சுற்றி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

*காக்கவென வந்த சட்டங்கள் அப்பாவிகளுக்கு எதிரானது ஏன்…?

*மாணவர்களின் கல்வி சிறையிலா…?

*விரைந்து சிறைக் கதவுகள் திறக்கட்டும், வீணே மூடிக் கிடக்கும் எங்கள் பல்கலைக்கழக கதவுகள் திறக்கட்டும்!

போன்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட சுவரொட்டிகள் பல்கலைகழக வளாக சுற்றாடல் எங்கு ஒட்டப்பட்டுள்ளது.

10 நாட்களின் முன் (03/05) படையினரும், காவல்துறையினரும் திட்டமிட்ட வகையில் யாழ் பலகலைக்கழக வளாகத்தில் பெருந்தொகையாக குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்திய பின் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பதற்காக பல்கலைச்சமூகத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலை சூழலில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.