Home உலக செய்திகள் முள்ளிவாய்க்கால் வாரம் – பிரித்தானியாவில் ஆரம்பமான அடையாள உண்ணா நிலைப் போராட்டம்!

முள்ளிவாய்க்கால் வாரம் – பிரித்தானியாவில் ஆரம்பமான அடையாள உண்ணா நிலைப் போராட்டம்!

29
0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளை வேற்றினத்தவர் கண்முன் மீளக் கொண்டுவந்து தொடர்ந்து அழிக்கப்பட்டும், அடக்கப்பட்டும் வரும் தமிழினத்திற்கு நீதி கோரி அடையாள உண்ணா நிலைப் போராட்டம் ஒன்று பிரித்தானியாவில் நேற்று ஆரம்பமானது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு வாரத்தின் முதலாம் நாளான நேற்று (11/05) காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இவ் அடையாள உண்ணா நிலைப் போராட்டம்.

பிரித்தானியப் பிரதமரின் வாசல்தலத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு முன்னெடுப்பில் குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்குபற்றியிருந்தாலும், நேர்த்தியாகவும், அமைதியாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.