Home செய்திகள் நாவாந்துறை பச்சை பள்ளிவாசலில் பதட்டம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு!

நாவாந்துறை பச்சை பள்ளிவாசலில் பதட்டம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு!

43
0

யாழ்ப்பாணம்- நாவலர் வீதியில் உள்ள நாவாந்துறை பச்சைப் பள்ளிவாசலில் சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்தோருக்கும் பள்ளிவாசலைச் சேர்ந்தோருக்கும் இடையிலேயே தோன்றிய முறுகல் நிலையால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.30 மணியளவில், நாவாந்துறை பச்சைப் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவிவின் போதே தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்தோர் குழப்பம் விளைவித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் முரண்பட்டுக் கொண்ட இரண்டு தரப்பினரையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அங்கிருந்து கலைந்து செல்ல உத்தரவிட்டதனால் இரு அணியும் கலைந்து சென்றது.