Home செய்திகள் இராணுவ அதிகாரிகளுக்காக 357 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம்!

இராணுவ அதிகாரிகளுக்காக 357 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம்!

16
0

உணவு, உடை, வீடு என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களின் நிலையை கருத்தில் கொள்ளாது இராணூவ அதிகாரிகளுக்காக 357.19 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம் ஒன்றை மைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைப்பவம் கொழும்பு, மனிங்டவுனில் நடைபெற்றுள்ளது.

நேற்று முந்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெளத்த தேரர்கள் உட்பட உயர்மட்ட இராணூவ அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு இதற்கு அருகில் ஏற்கனவே பல மில்லியன் செலவில் புதிதாக இராணுவத்தினரின் விடுமுறைக்காக அமைக்கப்பட்ட விடுதியை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க திறந்தும் வைத்துள்ளார்.

போர் வடுக்களில் இருந்து இன்னமும் மக்கள் மீளாத நிலையில், வடமாகாணம் அபிவிருத்தி செய்யப்படாமல் மக்களின் காணிகள் இராணுவத்தின் பிடிக்குள்ளும், மக்கள் முகாம்களிலும், காடுகளில் மரங்களின் கீழும் வாழ்ந்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களைப் பொருட்படுத்தாது மீள் கட்டுமாணம், அபிவிருத்தி, என காட்டி வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பெருந்தொகை நிதியை இவ்வாறு படையினருக்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் அபிவிருத்திக்கும் பாவிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.