Home முக்கிய செய்திகள் கைதுகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: இ.ம.உ.ஆ ஜனாதிபதிக்கு கடிதம்:

கைதுகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: இ.ம.உ.ஆ ஜனாதிபதிக்கு கடிதம்:

14
0

அனைவரினதும் உரிமைகளையும் கலாச்சார மத உணர்வுகளையும் மதிக்கும் விதத்தில் அவசரகால சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு அவசரகால சட்ட விதிகளின் கீழ் கைதாவோர் தொடர்பில் கடிதம் ஒன்றையும், கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான பட்டியல் ஒன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

  1. 01. நபர் ஒருவரை கைதுசெய்யும் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகளாக பின்வரும் விடயங்களை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
  2. 02. கைதுநடவடிக்கையில் ஈடுபடும் நபர் தன்னை தனது பதவியை கைதுசெய்யப்படும் நபரிடம் அல்லது அவரது உறவினரிடம் உறுதிசெய்யவேண்டும்.
  3. 03. கைதுசெய்யப்படும் நபர்கள் அனைவரிற்கும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவேண்டும்.
  4. 04. கைதுசெய்யும் நபர் கைதுசெய்யப்படுபவரின் குடும்பத்தவரிற்கு அதற்கான ஆவணத்தை வழங்கவேண்டும்.
  5. 05. குறிப்பிட்ட ஆவணத்தில் கைதுசெய்யும் நபர் இடம் நேரம் உட்பட முக்கிய விடயங்கள் காணப்படவேண்டும்.
  6. 06. கைது செய்யப்படுபவர் அந்த ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும் மேலும் தான் கைதுசெய்யப்படும் இடம்நேரம் உட்பட முக்கிய விடயங்களை அதில் பதிவு செய்யவேண்டும்.
  7. 07. கைதுசெய்யப்பட்டவர் பயன்படுத்தும் மொழியிலேயே அந்த ஆவணம் காணப்படவேண்டும்.
  8. 08. குறிப்பிட்ட ஆவணத்தை வழங்கமுடியாத பட்சத்தில்  கைதுசெய்யபவர் பொலிஸ் உத்தியோகத்தராகயிருந்தால் தகவல் குறிப்பேட்டில் ஏன் அந்த ஆவணத்தை வழங்கவில்லை என்ற தகவலை பதிவு செய்யவேண்டும்.
  9. 09. நபர் ஒருவர் குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் முன்னிலையில் கைதுசெய்யப்படாத பட்சத்தில் அந்த நபர் குடும்பத்தவர்கள் உறவினர்களை தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
  10. 10. கைதுசெய்யப்படும் நபரை  வெளிப்படையாக பார்வைக்கு தெரியும் விதத்தில்  வாகனங்களில் அழைத்துசெல்லவேண்டும்.
  11. 11. வாகனங்கள் உட்பட கைதுசெய்யப்படும் நபரிடமிருந்து சொத்துக்கள் ஏதாவது பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்தவுடனோ அல்லது 24 மணித்தியாலத்திற்குள்ளோ அது குறித்த  விபரங்கள் அடங்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை குறிக்கும் ஆவணத்தை குடும்பத்தவர்கள் உறவினர்களிடம் வழங்கவேண்டும்.
  12. 12. கைதுசெய்யப்பட்ட நபரை சோதனையிடும்பொது அவரின் கௌரவத்திற்கு மதிப்பளிக்கவேண்டும்.பலவந்தத்தையோ வன்முறையையோ பயன்படுத்தக்கூடாது அந்த நபரின் அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்கவேண்டும்.
  13. 13. கைதுசெய்யும் நடவடிக்கையின் பொது  கைதுசெய்பவர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.கைதுசெய்யப்படுவதை நபர் ஒருவர் எதிர்த்தால் ஆகக்குறைந்தளவு பலத்தை பயன்படுத்தலாம்.
  14. 14. கைதுசெய்யப்படும் நபரிற்கு காயங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
  15. 15. சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் அவமானப்படுத்தும் செயற்பாடுகள் தண்டனைகள் ஆகியன குற்றச்செயல்கள் என்பதுடன்  தடை செய்யப்பட்ட விடயங்களாகும்.

என அப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.