Home உலக செய்திகள் கிழக்கு இலண்டனில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு!

கிழக்கு இலண்டனில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு!

17
0

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள செவிண் கிங்ஸ் மசூதியிலேயே நேற்று (09/05) வியாழக்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரமழான் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது முகமூடி அணிந்த மர்ம நபர் கைத்துப்பாக்கியால் சுட்டவாறே உள் நுழைந்துள்ளார். உடனும் சுதாகரித்த தொழுகையில் இருந்த மக்கள் குறித்த ஆயுததாரியை மடக்கி பிடிக்க முயற்சித்த வேளை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிஸ்டவசமாக குறித்த சம்பவத்தில் உயிர் சேதங்களோ, அன்றி பாரிய பொருட் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரித்தானியக் காவல்துறையினர் தடையங்களை ஆராய்ந்ததோடு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்றும் அப்பிரதேசத்தில் அதிகளவான காவல்துறையினர் நிற்பதை காணமுடிந்தது.