Home உலக செய்திகள் ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றால் தள்ளுபடி:

ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றால் தள்ளுபடி:

23
0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் இன்று 09/05 வியாழக்கிழமை விசாரித்தனர்.

தொடரப்பட்ட வழக்கு மனுவில் விசாரணைக்கு ஏற்பதற்கு உரிய வாதம் ஏதும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கை தள்ளூபடி செய்துள்ளார்.