Home சினிமா 10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்!

10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்!

26
0

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றினூடாக இணைகின்றனர் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்.

இளையராஜா இசையில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் தமிழரசன் எனும் படத்திற்காகப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

எஸ்என்எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார்.

மலையாளத்தில் அதிகளவில் கவனம் செலுத்தினாலும் தமிழில் இளையராஜா இசையில் குறிப்பிடத்தகுந்த அளவு பாடல்களை ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

இருவரும் இணைந்து கடைசியாக பணிபுரிந்த படம் மலையாளத்தில் வெளியான பழசிராஜா ஆகும்.

சில தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் 10 ஆண்டுகளாக இணையாமல் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.