Home தமிழகச் செய்திகள் மாற்றத்தை நோக்கிய இந்தியத் தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

மாற்றத்தை நோக்கிய இந்தியத் தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

53
0

இந்தியாவின் 12 மானிலங்களுக்குமான 96 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. தமிழக பழம்பெரும் கட்சிகளின் இரு பெரும் தலைமைகளும் அற்ற நிலையில் வித்தியாசமான சூழலில் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர் மாற்றத்தை விரும்பும் புரட்சிமிக்க தமிழக மக்கள்.

தமிழ்நாட்டில் வேலூர் தவிர்ந்த ஏனைய 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7:00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் இன்று காலை தொடக்கம் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

அதேவேளை தமிழ்நாட்டில், வெற்றிடமாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று இடம்பெறுகிறது. இதற்காக 67,820 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகிறது.

வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை காண முடிகிறது. இதுவரை 30% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தமிழக தேர்தல ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதிக வெய்யில் காரணமாக வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். மீண்டும் மாலையில் அதிகளவான மக்கள் வாக்களிப்பில் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.