Home தமிழகச் செய்திகள் தேர்தல் பரப்புரையின் இறுதி நாள் இன்று – அனல் பறக்கும் பரப்புரையில் சீமான்!

தேர்தல் பரப்புரையின் இறுதி நாள் இன்று – அனல் பறக்கும் பரப்புரையில் சீமான்!

55
0

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வாழ்வா, சாவா என தமிழர்கள் தீர்மானிக்கும் நேரம் இதுவென கூறியுள்ளார்.

“விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

அந்த வகையில், இருபத்திரண்டாம் நாளான நேற்று 15-04-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பூ.பாரதிப்பிரியா, அவர்களை ஆதரித்து குமணஞ்சாவடி பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிறுத்தம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் இரவு 07 மணியளவில், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களை ஆதரித்து (ராக்கி திரையரங்கம் அருகில்) அம்பத்தூர் பொதுக்கூட்டத்திலும், இரவு 09 மணியளவில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்  ம.வெற்றிச்செல்வி அவர்களை ஆதரித்து (பேருந்து நிலையம் அருகில்) செங்குன்றம் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு ஆதரவு பரப்புரையில் ஈடுபட்டார்.

தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான 16-04-2019 இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 03 மணியளவில், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தி.நகர் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்)  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையினை மேற்கொள்ளவுள்ளார்.

புதியதொரு தேசம் செய்வோம்! புரட்சியால் அதை உறுதி செய்வோம்!