Home செய்திகள் மருதடி விநாயகர் தேர் உற்சவத்தில் பல்லாயிரம் பக்தர்கள்!

மருதடி விநாயகர் தேர் உற்சவத்தில் பல்லாயிரம் பக்தர்கள்!

67
0

யாழ்-மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க மருதடி விநாயகர் ஆலய ரதோட்சவம் தமிழ் சித்திரைப் புத்தாண்டு அன்று வருடம் தோறும் இடம்பெறுவது வழக்கம்.

பழம் பெரும் பாரம்பரியங்களோடு காலா காலமாக ஓர் இந்து மத நாடாக திகழ்ந்த இலங்கைத் தீவில் அன்னியர் வருகைக்கு பின் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைக்கப்பட்டும் மதங்கள் மாற்றப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் மருத மரத்தடியில் அமர்ந்திருன்த வி நாயகர் ஆலயம் அன்னியரால் சிதைக்கப்பட்டு அவ் ஆலயத்திற்கு எதிராக கிறிஸ்தவ ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் சில நாட்களில் மருத மரத்தடி வீற்றிருந்த விநாயகர் சிலை தானாகவே திசை மாறி திரும்பி இருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அதன் விளைவே வழக்கமாக கிழக்கு வாசல் கொண்டு அமையப்பெறும் சைவ ஆலயங்களுக்கு விதிவிலக்காக மருதடி விநாயகர் ஆலயம் மட்டும் மேற்குவாசல் கொண்டிருப்பதை காண முடியும்.

அதேவேளை, தானாக திருப்பிய விநாயகர் சிலையை தற்போதும் வீதியோரமாக உள்ள மூடப்பட்ட பழைய இராஜகோபுர வாசலில் காணலாம்.