Home செய்திகள் தமிழ் தகவல் மையத்தின் (TIC) தலைவர் வரதகுமார் காலமானார்!

தமிழ் தகவல் மையத்தின் (TIC) தலைவர் வரதகுமார் காலமானார்!

341
0

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் தகவல் மையம் (T.I.C) இன் நிறுவனர் திரு.வரதகுமார் அவர்கள் சுகஜீனம் காரணமாக இன்று 13.03.2019 புதன் கிழமை இலண்டனில் காலமானார்.

T.I.C வரதகுமார் என அனைவருக்கும் அறிமுகமான இவர் பிரித்தானியாவில் பல அமைப்புக்களையும் அரவணைத்து வந்தவர். தன்னை பிடிக்காதவர்களிடம் கூட இன்முகத்துடன் பழகும் பண்பு கொண்ட இவர் தனது உடல் நிலை, முதுமை என்பவற்றை பொருட்படுத்தாது அனைத்து தமிழர் நிகழ்வுகளுக்கும் செல்வதை காணமுடியும்.

அதுமட்டுமன்றி சமூக சேவகராக திகழ்ந்த இவர் தமிழர்கள் விடையத்தில் பல உதவிகளை செய்ததோடு, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, கொடுமையை, சர்வதேச அரங்கில் கொண்டுசெல்ல பல முனைகளில் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.