Home செய்திகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பொலிஸார் தாக்குதல்:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பொலிஸார் தாக்குதல்:

112
0

30 மாதமாக நிலுவையிலுள்ள சம்பள பணத்தை வழங்கக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகை, மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சிறீலங்கா கல்வி அமைச்சிற்கு அருகில் இன்று (28) இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. 

இப் போராட்டத்தின் போது 22 ஆண்டுகளாக கல்விச் சேவையில் காணப்படும் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனால் அப்பகுதியில், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டன. 

]]>