Home உலக செய்திகள் பாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்!

பாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்!

80
0

இந்திய, பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி இஸ்லாமிய தீவிரவாதிகளின் முகாம்களை அழித்துள்ளன.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இத் தாக்குதலில் இந்திய விமானப்படையின் “மிராஜ் -2000” விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது.

ஒரே நேரத்தில் 12 போர் விமானங்கள் மேற்கொண்ட இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படையின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்ற அதே வேளை இரு நாட்டிலும் போர் வெடிக்கும் பதட்ட நிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

]]>